தம்பி ராமையா தமிழ் திரை உலகின் மிக முக்கியமான நடிகர் சிறந்த நடிகர் என்று சொல்லலாம் அவரோடு சமுத்திரக்கனி சேரும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றிப்படங்கள் ஆகும் படங்களாகவும் இருந்திருக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது குறிப்பிடும்படியான படங்கள் என்றால் வினோதய சித்தம் என்ற திரைப்படம் உலகம் முழுக்க உள்ள அனைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த ஒரு திரைப்படம் என்றே சொல்லலாம், மீண்டும் எப்பொழுது இந்த கூட்டணியில் படம் வரும் என்று எதிர்பார்த்த பல்லாயிரம் ரசிகர்கள் இருக்கிறார்கள் அவர்களது எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் என்றுதான் நான் நினைக்கிறேன் ராஜா கிளி என்ற திரைப்படத்தை தம்பி ராமையா தனது சொந்த கதை திரைக்கதை வசனத்தில் தொடங்கி இருக்கிறார் இந்த படத்தின் இயக்கத்தை தன் மகன் உமாபதி இராமையாவிடம் ஒப்படைத்திருக்கிறார் இந்தப் படம் நிச்சயம் சமுத்திரக்கனி தம்பி ராமையா நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என்று இப்பொழுதே எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ஒரு சில படங்களை தம்பிராமையா இயக்கியிருந்தாலும் பெரிய அளவில் அந்த படத்திற்கு ஒரு பெயர் கிடைக்கவில்லை என்பது வருத்தமான விஷயமே மேலும் இந்தப் படத்தில் பழ கருப்பையா சுரேஷ் காமாட்சி சமுத்திரகனி தம்பி ராமையா அனைவரும் நடித்துள்ளார்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கும் சுரேஷ் காமாட்சி இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார் மேலும் இந்தத் திரைப்படத்தின் டீசரை வரும் 2023 மார்ச் 1ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு வெளியிட போவதாக படத்தின் தயாரிப்பு குழு அறிவித்துள்ளது மேலும் சினிமா தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தை பின்தொடருங்கள்
No comments:
Post a Comment
May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்