Saturday, August 26, 2023

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது



கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் மேலும் தமிழன் என்று சொல் என்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார் இது கேப்டன் விஜயகாந்த் இயக்குவதாக இருந்தது, விஜயகாந்தின் உடல் சூழ்நிலை சரியான நிலையில் இல்லாமல் போனதால் அந்தத் திரைப்படம் தவிர்க்கப்பட்டது,,, இதைத்தொடர்ந்து சசிகுமார் இயக்கத்தில் வேல ராமமூர்த்தியின் நாவலான குற்றப்பரம்பரை என்ற நாவலை தழுவி தொலைக்காட்சிக்காக வெப்சரிஸ் உருவாக்கப்பட இருந்தது. அது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இல்லாமல் இருந்தது அந்தப் படத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிப்பதாக பேசப்பட்டது ஆனால் அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை வெறும் வதந்தியாகவே பரப்பப்பட்டுக் கொண்டிருந்தது விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களால், தொடர்ந்து குற்றப்பரம்பரை வெப்சிடிசை இயக்கப் போவதாக சமீபத்தில் சசிகுமார் அறிவித்தார் ஆனால் சண்முக பாண்டியன் நடிக்கப் போவதாக அவர் அறிவிக்கவில்லை, அவரைப் பற்றிய தகவல் எதுவும் அந்த அறிவிப்பில் இல்லை, அதைத்தொடர்ந்து இந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் சண்முக பாண்டியன் ஒரு திரைப்படத்தில் யானை சம்பந்தமான சாகசப்படத்தில் அவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாக்கியது அதன் பட டைட்டில் விரைவில் விஜயகாந்த் மூலம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்படும் இருந்தது, அதன்படி ஆகஸ்டு 25 விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தனது மகனின் திரைப்பட போஸ்டரை வெளியிட்டார் படத்தின் தலைப்பு படைத்தலைவன் என்றும் இருந்தது அந்தப் படத்தில் டைட்டிலை ஒரு வீடியோ வடிவில் கிளிம்ப்ஸ் என பெயரிடப்பட்டு யூடியூபிலும் வெளியிடப்பட்டது, சண்முக பாண்டியனை தொடர்ந்து இந்தப் படத்தில் எம் எஸ் பாஸ்கர் கஸ்தூரிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின, இந்தப் படத்தின் இயக்குனர் யு அன்பு ஏற்கனவே வால்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார், அந்தத் திரைப்படம் சரியான வெற்றி பெறவில்லை என்பதும் தெரிந்தது, விஜயகாந்தின் மகன் இந்தப் படைத்தலைவன் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானவுடன் பெரிய அளவில் இந்த படத்தைப் பற்றிய பேச்சுகள் சோசியல் வலைதளங்களில் மிகவும் பிரபலமாகின ஆகையால் பெரிய எதிர்பார்ப்பில் இந்தத் திரைப்படம் வளர்ந்து கொண்டிருக்கிறது இந்த ஆண்டில் இந்த இந்த திரைப்படம் வெளிவருமா என்று தெரியவில்லை அடுத்த ஆண்டில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது


No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...