Thursday, March 9, 2023

ரசிகர்களை மிரட்டிய இளையராஜா விடுதலை பாடல் வெளியீட்டு விழாவில் நடந்த கலவரம்

 வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் விடுதலை பாகம் ஒன்று இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,




விஜய் சேதுபதி நடிக்கும் இந்த கதாபாத்திரத்தை முதலில் பாரதிராஜா நடிப்பதாக இருந்தது, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் இந்தத் திரைப்படத்திலிருந்து பாரதிராஜா விலகினார் அது மட்டும் இல்லாமல் அந்த நேரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார், இந்த காரணங்களுக்காக விடுதலை படத்தில் இருந்து விலகினார் பாரதிராஜா என்று தகவல்கள் சொல்லப்பட்டது, ஜெயமோகனின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார் வெற்றிமாறன், ஆடுகளம் கொடி வடசென்னை அசுரன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு ஆர் வேல்ராஜ், இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது இதில் ரசிகர்கள் கூச்சலிட்டதால் கடுப்பான இளையராஜா இளையராஜா, நீங்கள் அமைதி காக்க வில்லை என்றால் நான் மைக்கை வைத்துவிட்டு வெளியே சென்று விடுவேன் என்று மிகவும் கோபமாக கத்தினார், படக்குழுவை சார்ந்தவர்களும் வெற்றிமாறனும் ரசிகர்களை கையெடுத்து கும்பிட்டு அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்ட பிறகே இளையராஜாவின் ரசிகர்கள் அமைதி ஆனார்கள், இளையராஜாவின் பேச்சைக் கேட்டு சந்தோஷத்தில் ரசிகர்கள் கையைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள், ஆனால் அதை கூச்சலாக நினைத்து கோபப்பட்ட இளையராஜா மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் ஒருவழியாக ஆடியோ வெளியிட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகின படத்தின் டிரைலரும் வெளியானது 

No comments:

Post a Comment

May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...