அகிலன் திரைப்பட விமர்சனம் படம் எப்படி இருக்குன்னு வாங்க பார்க்கலாம் ஜெயம் ரவி பிரியா பவானி சங்கர் தான்யா ரவிச்சந்திரன் ,ஹரிஷ் பறையடி சாய்ய் தீனா, குமரவேல், ஆகியோர் படத்தில் நடித்திருக்கிறார்கள்,
படத்தின் ஒரு வரி கதை என்னவென்றால் ஜெயம் ரவி துறைமுகத்தின் பெரிய டான் ஆக விரும்புகிறார் அதற்கு உண்டான வேலைகளை வில்லத்தனமாக செய்கிறார் மிகவும் ரசிக்கும்படியான காட்சிகள் அதற்காக அமைக்கப்பட்டுள்ளது
இரண்டு கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார் படத்தில் நிறைய விபரங்கள் கூறப்பட்டுள்ளது
குறிப்பாக படத்தில் நிறைய அரசியல் விஷயங்கள் பேசி இருக்கிறார்கள் மக்களுக்கு தேவையான அரசியல் என்பதால் ரசிக்கும் காட்சிகளாக அமைந்துள்ளது
கடல் கடலை சார்ந்த மக்கள் மக்களை சார்ந்த கடல், மிக அருமையாக சொல்லி இருக்கிறார் படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்
படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு சித்திரம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை
பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் பெரிய அளவுக்கு இல்லை என்றாலும் கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தை சொதப்பி வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
காவல்துறை கதாபாத்திரம் பிரியா பவானி சங்கருக்கு பொருத்தமாக இல்லை என்பது பரிதாபமான விஷயம்
சில காட்சிகளில் தானியா ரவிச்சந்திரன் வந்தாலும் அருமையான நடிப்பு நிச்சயம் அவரை பாராட்டலாம்
அதுபோல சிறு சிறு காட்சிகளே வரும் ஹரிஷ் பறையடி ஹரிஷ் உத்தமன் சாய் தீனா குமரவேல் இவர்கள் தங்கள் கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நன்றாகவே நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,,
கடல் வணிகம் கடல் வியாபாரம் கடல் அரசியல் துறைமுகம் துறைமுகம் சார்ந்த அரசியல் துறைமுகத்தில் நடக்கும் கொள்ளைகள் ஊழல்கள் அனைத்துமே இந்த படத்தில் தெள்ளத் தெளிவாக விளக்கி சுட்டிக்காட்டி இருக்கிறார் படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்
இதற்கு முன்பு வெளியான பூலோகம் திரைப்படமும் ஜெயம் ரவி கல்யாண கிருஷ்ணன் இணைந்து வெளியான படம் அந்த திரைப்படமும் வியாபார ரீதியில் பெரிதாக போகவில்லை என்றாலும் அந்தப் படத்திலும் குத்து சண்டை சம்பந்தமாகவும் விளம்பரதாரர்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஊழல்கள் அனைத்தையும் விவரமாக கூறி இருப்பார்கள் கல்யாணகுமார்
அதைப்போலவே இந்த அகிலன் படத்திலும் கடல் கடல் வியாபாரம் துறைமுகம் துறைமுகம் சார்ந்த வியாபாரங்கள் அனைத்தையும் தெளிவாக கூறியிருக்கிறார் கடல் சம்பந்தமான துறைமுகம் சம்பந்தமான அனைத்து அரசியலையும் பேசி இருக்கிறார்கள்
படத்தில் எதிர்காலத்தில் இந்தப் படம் ஜெயம் ரவிக்கு கல்யாண கிருஷ்ணனுக்கு பெரிய அளவில் பேசப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை
படத்திற்கு இசை சாம் சி எஸ் வழக்கம்போல ஒரே அலறல் சத்தம் இருந்தாலும் பல காட்சிகளில் வெறுப்படையச் செய்தாலும் சில காட்சிகளில் ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார் சாம் சிஎஸ்
படத்தின் எடிட்டிங் ஒலிப்பதிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது
படத்தின் ஒளிப்பதிவை சொல்லலாம் சிறப்பான ஒளிப்பதிவு சிறப்பான எடிட்டிங் அனைத்து விதத்திலும் படம் சிறப்பாக உள்ளது நீங்கள் திரையரங்கில் சென்று கண்டு களிக்கலாம்
மேலும் சினிமா தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைதளத்தை பின் தொடருங்கள்
காட்டு மல்லி என்ற பாடலை காப்பி அடித்த இளையராஜா